அதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேசக்கூடாது: அமலாக்கத்துறை எச்சரிக்கை!

அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரும் மீடியாக்களுடன் பேசக்கூடாது என்றும், அவ்வாறு பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமலாக்கத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீடியாக்களுடன் பேச அமலாக்கத்துறையில் ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே பேசஅதிகாரம் உண்டு. அவர்களை தவிர மற்ற யாரும் மீடியாக்களிடம் பேசக் கூடாது மற்றும் விசாரணை குறித்த தகவல்களை பகிரக்கூடாது என்று கடந்த 2011 நவம்பர் மாதமே அமலாக்கத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. இருந்தும் விதிமுறையை மீறி, ஒரு சில அதிகாரிகள் மீடியாவுக்கு தகவல் அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது அமலாக்கத்துறை விசாரணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இன்று இந்த உத்தரவு சில மாற்றங்களுடன் மீண்டும் பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, மீடியாக்களுடன் பேச அனுமதி அளிக்கப்பட்ட அதிகாரிகளை தவிர, வேறு எவரும் மீடியாவுக்கு தகவல் அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP