பூர்வீகம் தேடி இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பேர் தங்களது மூதாதையர்களின் பூர்வீகத்தை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இந்தியாவுக்கு வந்து மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பூர்வீகம் தேடி இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பேர் தங்களது மூதாதையர்களின் பூர்வீகத்தை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இந்தியாவுக்கு வந்து மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த சூசன் க்ளாஸ்ஃபர்டு (77) மற்றும் பீட்டர் க்ளாஸ்ஃபர்டு (87) சிறு வயதில் இருந்தே இந்தியாவின் மீது பெரும் ஈர்ப்பு இருந்துள்ளது. அவர்களது தந்தை, தந்தையின் சகோதரர்கள், பாட்டனார் என அனைவருமே இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களாம். மகராஷ்டிர மாநிலத்தில், அவர்களின் குடும்பத்தின் பூர்வீகம் அமைந்திருந்ததை அவர்களின் தந்தை கூறிய கதைகளில் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். தங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய ஒரு பங்கு இந்தியாவில் இருப்பதாக தாங்கள் எப்போதுமே கருதியதாகவும் இந்தியாவுக்கு வந்து அந்த இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதலே தங்களுக்கு இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தங்கள் தாத்தாவின் பெயரில் மகராஷ்டிராவில் ஒரு கிராமம் இருப்பதை தெரிந்து கொண்ட அவர்கள், அதை வைத்து தங்கள் பூர்வீக இடங்களை கண்டுபிடிக்க இந்தியா வந்துள்ளனர். 170 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தங்களது குடும்பத்தினர் வாழ்ந்த இடங்களை பார்க்க சூசன், பீட்டர் மற்றும் அவரது மனைவி ஆகிய மூவரும் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் செய்துள்ளனர். கடைசியாக ஜெய்ப்பூருக்கு வந்த அவர்களுக்கு காத்திருந்தது அற்புதமான செய்தி. அங்குள்ள ஒரு வாகன ஓட்டுநர், அவர்கள் தாத்தாவின் பெயரில் உள்ள அந்த கிராமத்தை கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார். 'க்ளாஸ்ஃபர்டு பேத்தா' என்ற அந்த குக்கிராமத்தில் தங்குவதற்கு என எந்த இடமும் கிடையாதாம். நீண்ட நேர பயணத்திற்கு பிறகு கிராமத்தை சென்றடைந்த அவர்களை, அங்கு ராஜமரியாதையுடன் மக்கள் வரவேற்றதாக கூறுகின்றனர். "நாங்கள் யார் என்று தெரிந்தவுடன் அங்கு கூட்டம் கூடியது. நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. அவர்கள் அனைவரும் எங்களை வரவேற்று உதவி செய்தார்கள். அங்குள்ள வீடுகளை சென்று பார்த்து, பலரிடம் எங்கள் குடும்பத்தைப் பற்றிய தகவல்களை கேட்டரிந்தோம். அங்குள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் எங்களுக்கு மேலும் சில தகவல்களை கொடுத்து உதவினார்" என அவர்கள் கூறினர்.

"எங்கள் மூதாதையர்களுக்கு இந்தியாவில் உள்ள அசைக்க முடியாத தொடர்பு பற்றி, இங்கு வந்த பிறகு தான் எங்களுக்கு முழுவதும் புரிந்தது. எங்கள் வாழ்வில், இந்த பயணத்தை என்றுமே நாங்கள் மறக்க மாட்டோம்" என்று அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP