அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்: காங்கிரஸ், பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்வேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தை மையமாகக் கொண்டு, காங்கிரஸும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டகிறிஸ்டியன் மைக்கேல் தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.
 | 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரம்: காங்கிரஸ், பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்வேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தை மையமாகக் கொண்டு, காங்கிரஸும்,  பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் அவரை புதன்கிழமை டெல்லி  சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது,  இளைஞர் காங்கிரஸ் சட்டப் பிரிவின் தேசிய பொறுப்பாளரான அல்ஜோ கே. ஜோசப் உள்ளிட்ட மூன்று வழக்குரைஞர்கள் அவருக்காக ஆஜராகினர்.

இதன் மூலம் மைக்கேலை காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது என பாஜக  விமர்சித்தது.

பாஜகவின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியது:
யாரையும் காப்பாற்ற காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. மாறாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மகளின் சட்ட நிறுவனம் தான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, தற்போது தலைமறைவாகியுள்ள முகுல் சோக்ஷி மீதான  வழக்கில் அவருக்காக வாதாடி வருகிறது.

 மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்புப் பட்டியலில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை "இந்தியாவில் தயாரிப்போம்" திட்டத்தில் சேர்த்துள்ளதுடன், 100 கடற்படை ஹெலிகாப்டர்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்துக்கு ஏல அறிவிப்பும் வெளியிட்டது. இதன் உள்நோக்கம் என்ன?  

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட இருவரை இத்தாலிய நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தபோது, அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? என்றும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP