நீரவ் மோடியின் 11 சொகுசு கார்கள் மற்றும் ஓவியங்களை ஏலத்தில் விட அனுமதி!

வங்கிக்கடன் மோசடியில் தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது விலைமதிப்பு மிக்க 11 சொகுசு கார்கள் மற்றும் 173 ஓவியங்களை விற்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 | 

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்சியும் லண்டனுக்கு தப்பிச்சென்றனர். 

இந்நிலையில்,  லண்டன் நீதிமன்ற உத்தரவுப்படி, வைர வியாபாரி நீரவ் மோடியை, லண்டன் ஹால்பான் மெட்ரோ ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இதையடுத்து, நீரவ் மோடியின் விலைமதிப்பு மிக்க ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 11 சொகுசு கார்கள் மற்றும் 173 ஓவியங்களை விற்க அமலாக்கத்துறைக்கு மும்பையில் உள்ள நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதில், 173 ஓவியங்களின் மதிப்பு ரூ. 57.72 கோடி என கூறப்பட்டுள்ளது. இவற்றில் 68 ஓவியங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து கார்கள் மற்றும் ஓவியங்களை அமலாக்கத்துறை தன்வசப்படுத்தியுள்ளது. 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP