ஏடிஎம் மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனை தோல்வியா?? ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள்!!

தானியங்கி மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளில் ஏற்படும் தோல்விகளால் பல நேரம் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
 | 

ஏடிஎம் மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனை தோல்வியா?? ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள்!!

தானியங்கி மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளில் ஏற்படும் தோல்விகளால் பல நேரம் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

ஏடிஎம் மற்றும் டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் மக்களின் முக்கிய குற்றச்சாட்டாக கருதப்படுவது, ஓர் வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பும் பொழுது, அனுப்புபவரின் கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம், பெறுபவரின் கணக்கிற்கு பல நேரங்களிலும் சென்றடைவதில்லை என்பதே ஆகும். இதனை "தோல்வியுறும் பரிவர்த்தனைகள்" என்பர்.

இதற்கு, ஏடிஎம் மெஷின்களில் ஏற்படும் பணப்பற்றாக்குறை, இன்டர்நெட்  தொடர்பு துண்டிக்கப்படுதல், போன்ற பல காரணங்களை முன் வைக்கின்றனர் வங்கி அதிகாரிகள். 

எனினும், அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய நேரங்களில் இது போன்ற தோல்வியுறும் பரிவர்த்தனைகளால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு உதவிடும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

1. ஏடிஎம் மெஷின்கள் முலம் பரிவர்தனை மேற்கொள்ள முயலும் போது, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரொக்கம் கழிக்கப்பட்டு, அதே நேரம் அந்த தொகை ஏடிஎம் இயந்திரத்திலிருந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு வெளிவரவேண்டும். அவ்வாறு வெளிவரவில்லையெனில், டெபிட் கார்டு வழங்கிய வங்கியானது, பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலாக 5 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் தோல்வியடைந்த பரிமாற்ற தொகையை வரவு வைத்துவிட வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலாக 5 நாட்கள் கடந்த பின்னர் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் இழப்பீடாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு, வங்கி வழங்க வேண்டும்.

2. ஒருவரின் கார்டு மூலம் மற்றொருவரின் கார்டுக்கு பணம் செலுத்த முயலும் போது, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரொக்கம் கழிக்கப்பட்ட அதே நேரம், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு பணம் சென்றடையவில்லையெனில், டெபிட் கார்டு வழங்கிய வங்கியானது, பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலாக 1 நாளிற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் தோல்வியடைந்த பரிமாற்ற தொகையை செலுத்தி விட வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலான ஒரு நாளுக்கு பின்னர் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் இழப்பீடாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு, வங்கி வழங்க வேண்டும்.

3. விற்பனை நேரங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்தனைகளின் போது, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரொக்கம் கழிக்கப்பட்ட அதே நேரம், கட்டணச் சீட்டு வெளிவரவில்லையெனில், சம்பந்தப்பட்ட வங்கியானது, பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலாக 5 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் தோல்வியடைந்த பரிமாற்ற தொகையை செலுத்திவிட வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலான 5 நாட்களுக்கு பின்னர் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் இழப்பீடாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு, வங்கி வழங்க வேண்டும்.

4. உடனடி கட்டண முறைகளில் பரிவர்தனைகள் மேற்கொள்ளும்போது, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ரொக்கம் கழிக்கப்பட்ட அதே நேரம், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு பணம் சென்றடையவில்லையெனில், டெபிட் கார்டு வழங்கிய வங்கியானது, பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலாக 1 நாளிற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் தோல்வியடைந்த பரிமாற்ற தொகையை வரவு வைத்துவிட வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், பரிமாற்றம் நிகழ்ந்த நாள் மற்றும் கூடுதலான ஒரு நாளுக்கு பின்னர் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தலா 100 ரூபாய் இழப்பீடாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு, வங்கி வழங்க வேண்டும்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP