அசாம் மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக அசாம் மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 | 

அசாம் மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

மோசமான வானிலை காரணமாக அசாம் மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் கவுகாத்தியிலிருந்து நாராயணன்பூருக்குச் ஹெலிகாப்டரில் சென்றார். நாராயண்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சென்று கொண்டிருந்தார்.

ஹெலிகாப்டரில் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாக அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் ஹெலிகாப்டர் திறக்கப்பட்டதால் எந்த வித பாதிப்பும் இன்றி முதல்வர் உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP