கங்கையில் கலக்கும் ஆசியாவின் மிகப்பெரிய சாக்கடை நிறுத்தம்!

கங்கை நதியை சுத்தம் செய்ய மத்திய அரசு செயல்படுத்தி வரும் நமாமி கங்கை திட்டத்தின் மூலம், 128 ஆண்டுகள் பழமையான, ஆசியாவின் மிகப்பெரிய சாக்கடை என்றழைக்கப்படும் சிஸ்ஸமு நல்லா கங்கையில் கலப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

கங்கை நதியை சுத்தப்படுத்த, கடந்த 2014ம் ஆண்டு, மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நமாமி கங்கை என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தில் கங்கை நதியை அசுத்தப்படுத்தி வரும் கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்ய திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் 128 ஆண்டுகள் பழமையான, ஆசியாவின் மிகப்பெரிய கழிவுநீர் கால்வாய் சிஸ்ஸமு நல்லாவை பொறியாளர்கள் வெற்றகரமாக கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையத்திற்கு திருப்பிவிட்டுள்ளனர். இது நமாமி கங்கை திட்டத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக 14 கோடி லிட்டர் கழிவுநீர், கங்கையில் கலந்ததாக கூறப்பட்ட நிலையில், 8 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், மீதி 6 கோடி லிட்டர் கழிவுநீரைச் சுத்தப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது சிஸ்ஸமு நல்லாவின் சுத்தீகரிப்பு அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திடம்  கங்கைத் திட்டம் குறித்து விளக்கப்பட்டது. அப்போது, கங்கை நதியை சுத்தம் செய்யும் மொத்தமுள்ள 32 திட்டங்களில் 15 திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், மீதி 16 திட்டங்களுக்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP