உ.பி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!

உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக நடைபெற்ற கலவரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராணுவ வீரர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 | 

உத்தர பிரதேசத்தின், புலந்தசாஹ்ர் பகுதியில், சில தினங்களுக்கு முன், பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்த சிலருடன், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியை சேர்ந்த பசுவை, இறைச்சிக்காக கொலை செய்துவிட்டதாக பசுவின் உடலுடன் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் கலவரமாக மாற, சமாதானம் செய்ய சென்ற காவல்துறை இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், போராட்டக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒரு இளைஞரும் பலியானார். 

இதுதொடர்பாக உ.பி போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் கொலையில் ராணுவ வீரர் ஒருவருக்கு தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஜிதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரர், காஷ்மீரில் வைத்து அவரது படையை சேர்ந்த அதிகாரிகளாலேயே கைது செய்யப்பட்டார். அவரை, விசாரிக்க, உ.பி போலீசார் காஷ்மீர் விரைந்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP