'என்கிட்டயே அபாரதமா?' - சப் இன்ஸ்பெக்டரை பழிக்குப்பழி வாங்கிய மின் ஊழியர்!

ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டரை பழிவாங்கும் விதமாக, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளார் மின்வாரிய ஊழியர் ஒருவர்.
 | 

உத்தப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஸ்ரீனிவாஸ். இவர் ஹெல்மெட் அணியாமல் சாலையில் சென்றபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திரா, ஸ்ரீநிவாஸை தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாததற்காக ரூ.500 அபராதம் செலுத்துபடி கூறியுள்ளார். 

ஆனால் ஸ்ரீனிவாஸ், 'என்னிடம் பணமில்லை; இந்த ஒரு முறை விட்டுவிடுங்கள்' என்று கூறியும் போலீஸ் கேட்காததனால், தன்னுடைய அதிகாரி ஒருவருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார். ஆனால், சப்-இன்ஸ்பெக்டர் அதனை நிராகரித்ததுடன், கண்டிப்பாக அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் என்று கூற, ஸ்ரீனிவாஸ் வேறுவழியின்றி அபராதம் செலுத்தியுள்ளார். 

'என்கிட்டயே அபாரதமா?' - சப் இன்ஸ்பெக்டரை பழிக்குப்பழி வாங்கிய மின் ஊழியர்!

தான் கெஞ்சியும், மன்னிப்பு கேட்டும் விடாத போலீசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திரா இருக்கும் 'லைன்பார்' காவல்நிலையத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டார் ஸ்ரீனிவாஸ். சுமார் 4 மணி நேரமாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் போலீசார், மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த மின் ஊழியர்கள், 'கடந்த 2016ம் ஆண்டு முதல் உங்கள் காவல் நிலையத்திற்கான மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலுமில்லை. எனவே நீங்கள் செலுத்தவேண்டிய ரூ. 6,62,463 செலுத்தினால் தான் மின் இணைப்பு கொடுக்கப்படும்" என்று கூறியுள்ளனர். அபராதம் செலுத்திய மின்வாரிய ஊழியரின் வேலை தான் இது என போலீசாருக்கு பின்னர் தெரிய வந்தது. 

'என்கிட்டயே அபாரதமா?' - சப் இன்ஸ்பெக்டரை பழிக்குப்பழி வாங்கிய மின் ஊழியர்!

இதுகுறித்து லைன்பார் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் ஒருவர் கூறும்போது, "ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் விதிமுறை உள்ளது. இதுவரை ஹெல்மெட் அணியாத காரணத்தினால் 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் எங்களது கடமையை தான் செய்து வருகிறோம்.

அதே நேரத்தில் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டியதில் 1.5 கோடி செலுத்திவிட்டோம். மீதித்தொகையை விரைவில் செலுத்தி விடுவோம்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP