பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல்- இந்திய அணியை பாராட்டிய அமித்ஷா

பாகிஸ்தான் மீது மற்றுமொரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.
 | 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்திய அணி வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னது போன்ற அதே முடிவுகளை பெற்றுள்ளோம் என அமித்ஷா கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது.

கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட, விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP