கர்நாடகாவில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா!

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ இன்று ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா!

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ இன்று ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் -ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 13 பேர் ஏற்கனவே தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர்.

விடுமுறை முடிந்து கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் இன்று பேரவைக்கு  திரும்பியுள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளித்தால் ராஜினாமா கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

இந்த சூழ்நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஷன் பெய்க் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஈக்களின் எண்ணிக்கை 14 ஆக (காங்கிரஸ் -11, மஜத -3) அதிகரித்துள்ளது. மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் ஓர் தகவல் வெளிவந்துள்ளது. 

இதற்கிடையே, ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வதுடன், அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கவும்  சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP