சிறைத் தண்டனையில் இருந்து தப்பிய அனில் அம்பானி!

எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனம் 460 கோடி ரூபாய் தந்துள்ளதையடுத்து, இந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.
 | 

எரிக்சன் இந்தியா நிறுவனம் தனது நிறுவன சொத்துக்கள், உடைமைகளை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது.
இதற்காக, இந்நிறுவனம் தரவேண்டிய 550 கோடி ரூபாயை தராமல் நிலுவையில் வைத்திருந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணைக்காக அனில் அம்பானி, உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 12 -ஆம் தேதி ஆஜரானார். அப்போது,  எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய 550 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்று அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் விதித்திருந்த காலகெடு முடிவடைந்துவிட்ட நிலையில், எரிக்சன் இந்தியா நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனம் 460 கோடி ரூபாயை இன்று அளித்துள்ளது. இதையடுத்து,  அனில் அம்பானி சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP