சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது!

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியது.
 | 

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு விருது!

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியது. 

சுற்றுலாத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2017-18ஆம் ஆண்டில் சுற்றுலாத் தொழிலில் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக ஆந்திர மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஆந்திர மாநிலத்திற்கான இந்த விருதை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு வழங்கினார்.

அப்போது பேசிய அவர், சுற்றுலாத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம் நாட்டிற்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வரும் பொருட்டு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இந்தியா வளர்ச்சி கண்டுவருகிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது' என்று பேசினார்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP