கார்கில் வீரர்களுடனான கலந்துரையாடல் ஓர் மறக்க முடியாத அனுபவம்: பிரதமர் மோடி!

1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்து முடிந்த சமயத்தில் அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடியது வாழ்வில் மறக்கமுடியாதது என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்.
 | 

கார்கில் வீரர்களுடனான கலந்துரையாடல் ஓர் மறக்க முடியாத அனுபவம்: பிரதமர் மோடி!

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்ற வீரர்களுடன் கலந்துரையாடியது வாழ்வில் மறக்கமுடியாதது என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்துள்ளார். 

1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இந்திய பகுதியை கைப்பற்றியது. இந்தப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு நேரில் சென்று மரியாதையை செலுத்தியதை எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் கட்சிக்காக நான் வேலை செய்துகொண்டிருந்த நேரம் அது. அப்போது கார்கில் போர் நடந்த இடத்திற்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடியது என் வாழ்வில் மறக்கமுடியாதது" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP