அமிர்தசரஸ் ரயில் விபத்து: அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை!

பஞ்சாபில் ராவணவதம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதி 61 பேர் பலியான சம்பவத்தில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
 | 

அமிர்தசரஸ் ரயில் விபத்து: அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை!

பஞ்சாபில் ராவணவதம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதி 61 பேர் பலியான சம்பவத்தில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம், பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற ராவண வத நிகழ்ச்சியின்போது, அங்குள்ள தண்டவாளத்தின் அருகே கூடியிருந்த பொதுமக்கள் மீது, ரயில் மோதியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணம், போதிய பாதுகாப்பில்லாமல் விழாவை ஒருங்கிணைத்தவர்கள் தான், என கூறப்பட்டு வந்தது. விழாவை ஒருங்கிணைத்தது அம்மாநில ஆளும்கட்சியான காங்கிரஸை சேர்ந்த அப்பகுதியின் முக்கிய புள்ளி ஒருவர் என கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க, சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.

தீவிரமாக விசாரித்து அந்த கமிட்டி, அப்பகுதியின் ரயில்வே கேட் ஊழியர் மற்றும் விழாவை ஒருங்கிணைத்தவர்கள் உட்பட பலரின் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பஞ்சாப் அமைச்சர் சித்துவின் மனைவி நவஜோத் கவுருக்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அப்பகுதி கவுன்சிலரின் மகன் சவுரப் மதன் மித்து, ரயில்வே கேட் ஊழியர், முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போதிய அனுமதி வாங்காமலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் போனதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பெரும் கூட்டம் வருவது தெரிந்தும் ரயில்வே ஊழியர்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தனி விசாரணையில், தண்டவாளத்தில் நின்ற பொதுமக்கள் தான் விபத்துக்கு காரணம் என் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP