ஒரே தேசம், ஒரே தேர்தல் தேவை: சட்ட ஆணையத்துக்கு அமித் ஷா கடிதம்

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார்.
 | 

ஒரே தேசம், ஒரே தேர்தல் தேவை: சட்ட ஆணையத்துக்கு அமித் ஷா கடிதம்

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று சட்ட ஆணையத்துக்கு அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். 

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனையில் சட்ட ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான ஆய்வையும் சட்ட நிபுணர்கள் செய்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்க முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் சட்ட ஆணையம் இறங்கியுள்ளது.

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜ.க நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜய் சஹஸ்ரபுத்தே, பூபேந்தர் யாதவ், அனில் பலுனி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் சட்ட ஆணைய தலைவர் பி.எஸ்.சவுகானை சந்தித்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்த கருத்தை வலியுறுத்தி பா.ஜ.க நாளை முதல் 30ம் தேதி வரை விழப்புணர்வில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில், பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித்ஷா சட்ட ஆணையத்துக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கொள்கை முடிவு. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அதேபோல ஆண்டு முழுவதும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்று வருவதும் தவிர்க்கப்படும்.

இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்பது ஆதாரமற்ற வாதம். மாறாக இது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும். இதுபற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்து அரசியலுக்காக கூறப்படுவதாகவே தெரிகிறது என கூறியுள்ளார். 

இந்த கொள்கைக்கு பிராதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP