அதிகமாக விமர்சிக்கப்பட்ட அரசு பாஜக அரசு - அமித் ஷா கருத்து!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்ற ராகுல் பஜாஜின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
 | 

தேசிய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் உரையாற்றிய பஜாஜ் நிறுவன நிர்வாகி ராகுல் பஜாஜ், முன்னர் இருந்த ஆட்சிகள் விமர்சனங்களை ஏற்று கொள்வதை போல, தற்போதைய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு அவற்றை ஏற்று கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

மேலும், பாஜக தலைவர் ப்ரக்யா தாக்கூரின், நாதுராம் போஸ் பற்றிய கருத்துக்களை கடுமையாக கண்டித்த அவர், இதன்மூலம் பாஜக மக்களிடமிருந்து விலகி செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கருத்துக்களை தொடர்ந்து, இதற்கு பதிலளித்த பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, விமர்சனங்களை ஏற்க மறுக்கும் அரசு பாஜக என்னும் ராகுலின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும், சமீபத்திய ஆண்டுகளில் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் அரசு பாஜக தான் என்றும் கூறியுள்ளார்.

எதிலும், தெளிவாகவும், திட்டவட்டமாகவும் பேசும் ராகுல் பாஜாஜின் தைரியத்திற்கு தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP