குஜராத் சோம்நாத் கோவிலில் பூஜைகள் நடத்தி வழிபட்டார் அமித் ஷா!

தொடர் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
 | 

குஜராத் சோம்நாத் கோவிலில் பூஜைகள் நடத்தி வழிபட்டார் அமித் ஷா!

தொடர் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றுடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இன்று குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், அந்த கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். 

அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று கேதர்நாத் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP