Logo

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
 | 

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் நிறைவேறியது.

இந்த நிலையில் மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது, இந்த மசோதா, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியர்களாக இருந்தனர், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்றார்.  
பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் ஆதரவு அளித்த அதிமுக மாநிலங்களவையிலும் ஆதரவு அளித்தது. 
 
பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிராக 105 ஓட்டுகளும் கிடைத்தன. பாரதீய ஜனதா, ஐக்கிய ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் மற்றும் அ.தி.மு.க., பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், மசோதா எளிதாக நிறைவேறியது.

சிவசேனா எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து இந்த மசோதா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் சட்டமாகி அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்து விடும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP