அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர் புகழஞ்சலி !

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் 129 -ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
 | 

அம்பேத்கர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர் புகழஞ்சலி !

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் 129 -ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், " நம் தேசத்தின் போற்றுதலுக்குரிய தலைவரும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவருமான டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை நாடே இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது.

 சாதி, மத பேதங்கள் இல்லாத நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சமஉரிமை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வாழ்க்கை மேம்படவும், அவர் தன் வாழ்க்கையே அர்ப்பணத்து செயலாற்றியதை,  இந்நாளில் நாம் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்" என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மோடி மலரஞ்சலி: முன்னதாக, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மலரஞ்சலி செலுத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP