பத்ரிநாத் கோவிலுக்கு ரூ.2 கோடி கொடுத்த அம்பானி! எதற்கு தெரியுமா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, குங்குமப்பூ மற்றும் சந்தனம் வாங்குவதற்காக அவர் இரண்டு கோடி ரூபாய் தானமாக அளித்துள்ளார்.
 | 

உத்தரகாண்டில் குளிர்காலம் முடிவடைந்ததையொட்டி, அடுத்த ஆறு மாதங்களுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில் திறக்கப்பட்டுள்ளதால், திரளான பக்தர்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

தொடர்ந்து தகவல் தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார். கோவிலில் வழிபட்ட அவர், நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டி, சந்தனம் மற்றும் குங்குமப்பூ வாங்குவதற்காக இரண்டு கோடி ரூபாய் அவர் தானமாக அளித்துள்ளார்.

மேலும், பத்ரிநாத்& கேதர்நாத் கமிட்டிக்காக,  தமிழ்நாடு சந்தன காடுகள் பகுதியில் ஒரு இடத்தை வாங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP