அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவு!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவு!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2ம் தேதி அறிவுறுத்தியது. மேலும், காஷ்மீர் விவகாரம் காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. இந்த யாத்திரையில் 3.39 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP