அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு!

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 | 

அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு!

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் மற்றும் வெளியூர் மக்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு!

newstm.in

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP