ராம்ஜன்ம தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதா என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கலந்துரையாடல்!!

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்காக இன்று சந்திக்கவுள்ளது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்.
 | 

ராம்ஜன்ம தீர்ப்பு : மறுஆய்விற்கு போவதா என்பது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கலந்துரையாடல்!!

அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்காக இன்று லக்னோவில் வைத்து சந்திக்கவுள்ளது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி வழக்கில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு.

அதன்படி, அயோத்தியாவின் சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் குறித்த ஆவணங்கள் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறியதோடு, முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு.

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா வேண்டாம் என்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவிருந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பின் முடிவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று சம்மதம் தெரிவிக்கப்போகிறதா முஸ்லிம் வாரியம் என்பது தெரியவரும். 

மேலும், இன்று மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பின் முடிவில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முஸ்லிம் வாரியம் சம்மதம் தெரிவிப்பதாக இருக்கும் பட்சத்தில், இஸ்லாமியர்களுக்கென்று வழங்கபடவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்த தீர்மானமும் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய மனுதாரர்களான சன்னி வக்ஃப் வாரியம்,  உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதனை முழு மனதுடன் ஏற்று கொள்வதாகவும் கூறியுள்ளது. இவர்களை தொடர்ந்து, இன்று சந்திக்கவிருக்கும் முஸ்லிம் வாரிய உறுப்பினர்கள் பலரும் உச்ச நீதிமன்றத்தின் ஏற்பதாகவே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP