ஸ்ரீநகர் விரைந்தார் அஜித் தோவல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று ஸ்ரீநகர் விரைந்தார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய அவர் அங்கு சென்றுள்ளார்.
 | 

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து திரும்ப பெறப்பட்டத்திற்கு எதிராக அங்கு பிரிவினைவாதிகள் மற்றும் பாக்கிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஸ்ரீநகர் சென்றுள்ளார். 

ஏற்கனவே, அவரின் உயிருக்கும் பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், தன உயிரை பற்றியும் கவலைப்படாமல், அவர் அங்கு சென்று அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்தி வருகிறார். 

  newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP