மும்பையில் விமானச் சேவைகள் ரத்து

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 | 

மும்பையில் விமானச் சேவைகள் ரத்து

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் மற்றும் பிப்ரவரி - மார்ச் ஆகிய இரண்டு காலகட்டங்களில், மும்பை விமான நிலைய ஓடுபாதைகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த சமயத்தில் 300 விமான சேவைகள் பாதிக்கப்படும். இதையொட்டி, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் முற்பகல் 11 மணிக்கு முன்னதாக அல்லது 5 மணிக்கு பின்பாக இருக்கும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விமானச் சேவைகள் மாற்றியமைக்கப்படுவது குறித்து டுவிட்டர் மற்றும் செய்தியறிக்கை மூலமாக பயணிகளுக்கு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களான ஏர் இந்தியா, கோ ஏர், உள்ளிட்ட நிறுவனங்கள் தெரியப்படுத்தியுள்ளன. இதுகுறித்து, தங்கள் நிறுவனங்களின் செல்போன் செயலி அல்லது தகவல் உதவி மையம் உள்ளிட்டவற்றின் மூலமாக பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP