பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீரில் விமான சேவை நிறுத்தம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில் விமானங்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் பறக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீரில் விமான சேவை நிறுத்தம்!

பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் பறக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 12 'மிராஜ் 2000' ரக போர் விமானங்கள், 1000 கிலோ எடை வெடிபொருட்களுடன் சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை தாக்கியது. 

இதில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பால்கோட், சாகோதி, முஷாரஃபாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

பாதுகாப்பு கருதி ஜம்மு காஷ்மீரில் விமான சேவை நிறுத்தம்!

இதனால், பாகிஸ்தான் எந்நேரமும் திருப்பி தாக்கலாம் என்ற கோணத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், இன்று காலை எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானங்கள் திருப்பு அனுப்பியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில், விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், லே ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விமான  நிலையங்களில்  உச்ச கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதற்றநிலை காணப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP