ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க புதிய திட்டம்!

ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 | 

ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க புதிய திட்டம்!

ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது என்று விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் உள்ளது. இதை குறைக்கவும், இந்த நிறுவனத்தை இழப்பில் இருந்து மீட்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், ஏர்இந்தியா நிறுவனத்தை கடனில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ஏர்இந்தியா நிறுவனத்தினை கடனில் இருந்து மீட்டெடுக்க சிறப்பு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஒருங்கிணைந்த நிதியுதவி, மாற்று தொழில்களின் கடன் மற்றும் சொத்துகளை தனி நிறுவனத்தின் கீழ் மாற்றுவது, நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிய வர்த்தக அணுகுமுறை மூலம் ஏர்இந்தியா நிறுவனம் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்தப்படாத சாதனங்கள், ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை செய்யப்படும். 

இந்த வகையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏர்இந்தியாவின் சொத்துகள் விற்பனையின் மூலம் இதுவரை 410 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் வாடகை வருவாயாக 314 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்றார் அமைச்சர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP