உடைந்த விமானத்தை 3 மணி நேரம் ஓட்டிய ஏர் இந்தியா பைலட்கள்

சேதமடைந்த விமானத்துடன் துபாய் வரை பயணம் செய்யவிருந்த ஏர் இந்தியா பைலட்டுகளை, அதிகாரிகள் சாமர்த்தியமாக தடம் மாற்றி அனுப்பியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
 | 

உடைந்த விமானத்தை 3 மணி நேரம் ஓட்டிய ஏர் இந்தியா பைலட்கள்

சேதமடைந்த விமானத்துடன் துபாய் வரை பயணம் செய்யவிருந்த ஏர் இந்தியா பைலட்டுகளை, அதிகாரிகள் சாமர்த்தியமாக தடம் மாற்றி அனுப்பியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் கிளம்பியது. விமானம் புறப்பட்ட போது, ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தால், விமானத்தின் உடல் பாகம் சேதமடைந்தது. விமான நிலையத்தில் உள்ள சுவற்றின் மீது விமானம் மோதியது. இதனால், விமானத்தின் லேண்டிங் கியர் மற்றும் உடல் பாகம் சேதமடைந்தது. 

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கேட்டபோது, விமான பாகங்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்வதாகவும், எந்த பிரச்னையும் இல்லையென்றும் விமானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சந்தேகப்பட்ட அதிகாரிகள், விமானம் துபாய் வரை செல்வது பாதுகாப்பாக இருக்காது என கணித்து, மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கி சோதனை செய்ய அறிவுறுத்தினர். விமானத்தை தரையிறக்கி சோதனை செய்தபோது, விமானத்தின் உடல் பாகம் சேதமடைந்தது தெரிய வந்தது. 

சேதமடைந்துள்ளது என்றே தெரியாமல் 3 மணி நேரத்திலும் மேல் விமானம் இயக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிகாரிகள் விமானத்தை துபாய் செல்ல விடாமல் தடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானிகள் மீது விசாரணை நடந்து வருகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP