ஜெட் ஏா்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஏா் - இந்தியா முடிவு

ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும் வழிதடங்களை பயன்படுத்தவும் ஏா்இந்தியா உள்பட பல விமான நிறுவனங்கள் ஆா்வம் காட்டுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.
 | 

ஜெட் ஏா்வேஸ் விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஏா் - இந்தியா முடிவு

ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும், வழிதடங்களை பயன்படுத்தவும், ஏா் - இந்தியா உள்பட பல விமான நிறுவனங்கள் ஆா்வம் காட்டுவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

கடன்சுமை மற்றும் நிதி நெருக்கடியால், ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் முடங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தங்களை இக்கட்டில் நிறுத்தியிருப்பதாக மும்பை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.டெல்லியிலும் ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மும்பை, டெல்லி விமான நிலையங்களில் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ஸ்லாட்டுகளையும், வழித்தடங்களையும் பயன்படுத்திக் கொள்ள, ஏர் - இந்தியா, ஸ்பைஸ்ஜெட்  உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.

இதேபோல, ஜெட்ஏர்வேஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தவும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP