விமானப்படை தினம்: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மரியாதை!

இந்திய விமானப்படை தினத்தையொட்டி முப்படையின் தளபதிகள் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
 | 

விமானப்படை தினம்: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மரியாதை!

இந்திய விமானப்படை தினத்தையொட்டி முப்படையின் தளபதிகள் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

விமானப்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நாடே பெருமையுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலை கையாள்வதில் மத்திய அரசின் நிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலே மாற்றம் ஏற்பட்டதற்கான உதராணம் என்றும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP