விமானப்படை தாக்குதல்- முக்கிய தீவிரவாதிகள் 2 பேர் பலி

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தனர்.
 | 

விமானப்படை தாக்குதல்- முக்கிய தீவிரவாதிகள் 2 பேர் பலி

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டுவந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தகர்த்தெறிந்தனர்.

இதில் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. விமானப்படையின் இந்த அதிரடி தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசாரும் கொல்லப்பட்டான். யூசுப் அசார் 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியவன் ஆவான்.

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட மற்றொரு முக்கிய தீவிரவாதியான மவுலானா அமர் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP