அயோத்தியா நிலத்தை ஏற்று கொள்வது குறித்து நவம்பர் 26ஆம் தேதிக்குள் தீர்மானிப்படும் - சன்னி வக்ஃப் வாரியம்!!!

அயோத்தியா வழக்கில் நேற்று வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய அயோத்தியா நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதோடு, இஸ்லாமியர்களுக்கென்று தனியாக அயோத்தியாவிற்குள் 5 ஏக்கர் நிலம் வழங்கபட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிலத்தை ஏற்று கொள்வது குறித்த முடிவை வரும் 26ஆம் தேதிக்குள் கூறுவதாக சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.
 | 

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவிப்பதாகவும், மீண்டும் இந்த வழக்கினை மறுபரிசீலனை செய்யகோரி மேல் முறையீடு செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தார் இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி வக்ஃப் வாரியத்தின் தலைவர் சுஃபூர் ஃபரூக்கி.

இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்படவுள்ள 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து வரும் நவம்பர் 26ஆம் தேதி மேற்கொள்ளப்படும் குழுவின் கலந்துரையாடலை தொடர்ந்து தெரிவிப்பதாக கூறியுள்ளார் சுஃபூர் ஃபரூக்கி.

மேலும், வாரியத்தின் உறுப்பினர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதால், அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் ஓர் கலந்துரையாடலை தொடர்ந்து ஓர் முடிவுக்கு வரவிருப்பதாக கூறும் ஃபரூக்கி, ராம்ஜன்ம பூமியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு அவர்களது தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP