பேராசிரியரை காலில் விழ வைத்து ஏபிவிபி மாணவர்கள் அட்டகாசம்!- அதிர்ச்சி வீடியோ

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தங்களது பேராசிரியரை அவர்களது காலில் விழ வைத்த அதிர்ச்சி விடியோ வைரலாக பரவி வருகிறது.
 | 

பேராசிரியரை காலில் விழ வைத்து ஏபிவிபி மாணவர்கள் அட்டகாசம்!- அதிர்ச்சி வீடியோ

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தங்களது பேராசிரியரை தங்களின் காலில் விழ வைத்த அதிர்ச்சி விடியோ வைரலாக பரவி வருகிறது. 

மத்தியப்பிரதேசத்தில் மண்ட்சாரில் ராஜீவ்காந்தி கல்லூரி உள்ளது. இங்கு தினேஷ் சந்திரகுப்தா என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரைத்தான், அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) அமைப்பைச்சேர்ந்தவர்கள் மிரட்டி காலில் விழ வைத்துள்ளனர்.

அங்கு படித்துவரும் மாணவர்களில் ஒருக் குழுவினர் ஏபிவிபி அமைப்பில் உள்ளனர். இவர்கள் கல்லூரிக்குள் பாரத் மாதா கீ ஜே என்று கோஷமிட்டபடி ரகளையில் ஈடுப்பட்டனர்.  அதனை அங்கு உள்ள பேராசிரியர் சந்திரகுப்தா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது ஆத்திரமடைந்த ஏபிவிபி மாணவர்கள், சந்திரகுப்தாவிடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும், அந்தப் பேராசிரியரை தேசத் துரோகி என்று அழைத்து அவரை தங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழி தெரியாத பேராசிரியர், ஏபிவிபி மாணவர்களின் காலைத் தொட்டு வணங்கி மன்னிப்புக் கேட்டுள்ளார். இதன் காட்சிகள் அந்த மாணவர்களால் பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் பரவியது. 

 

கல்லூரி பேராசிரியர் மிரட்டப்பட்டு மானவர்களால் மரியாதக் குறைவாக நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த கல்லூரியின் முதல்வர் ரவீந்திரகுமார் சோகானி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''பேராசிரியர் தினேஷ் சந்திரகுப்தா தங்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியர். அவர் 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிடயுள்ளார். மேலும், ஏற்கெனவே இதய மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து 3 நாட்க.ள் விடுப்பு எடுத்துக்கொண்டு இருந்த பேராசிரியர் சந்திரகுப்தா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ''ஏபிவிபி போராளிகளை விட எனக்கு அதிக நாட்டுப்பற்று உள்ளது. தேசபக்தி முழக்கங்களை ஒருமுறை அல்ல, ஆயிரம் முறை முழக்கமிடுவேன். ஆனால் அவர்களைப் போல அல்ல'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதே போல கடந்த 2006ஆம் ஆண்டு உஜ்ஜைனி கல்லூரி பேராசிரியரான சபர்வால் என்பவரை, ஏபிவிபி-யினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததும் பின்னர் நாக்பூர் நீதிமன்றத்தில் நடைந்த விசாரணைக்குப் பிறகு, அவர்கள் விடுதலை செய்யப்பட்ததும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP