Logo

நாடு திரும்பும் இந்தியாவின் ரியல் ஹீரோ அபிநந்தன் ! களைக்கட்டிய வாகா எல்லை!

பாகிஸ்தானிலிருந்து இன்று நாடு திரும்பும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, பஞ்சாப் மாநிலம், அட்டாரி -வாகா எல்லையில் உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 | 

நாடு திரும்பும் இந்தியாவின் ரியல் ஹீரோ அபிநந்தன் ! களைக்கட்டிய வாகா எல்லை!

பாகிஸ்தானிலிருந்து இன்று நாடு திரும்பும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, பஞ்சாப் மாநிலம், அட்டாரி - வாகா எல்லையில் உற்சாக வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமானத் தாக்குதலின்போது, விங் காமண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் வசம் சிக்கினார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்தியா மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தின.

இதனால் வேறு வழியின்றி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் நேற்று சம்மதம் தெரிவித்தது. இதனை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, ராவல்பிண்டியில் உள்ள ராணுவ முகாமிலிருந்து அபிநந்தன், இன்று லாகூருக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகிறார். 
அங்கிருந்து சாலை மார்க்கமாக, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்துக்குள்பட்ட அட்டாரி - வாகா எல்லைப் பகுதிக்கு அழைத்து வரப்படும் அபிநந்தன். அங்கு முறைப்படி இந்தியா வசம் ஒப்படைக்கப்படுகிறார். 

அங்கு அவரை, பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் உள்ளிட்டோர் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, இன்று காலை முதலே வாகா எல்லைப் பகுதி களைகட்டியுள்ளது. இந்தியாவின் "ரியல் ஹீரோ" வான அபிநந்தனை உற்சாகமாக வரவேற்க நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்துள்ளனர். அவர்கள் கையில் தேசியக்கொடியை ஏந்தியப்படி  வெற்றி முழக்கமிட்டு வருகின்றனர்.

ட்ரெண்டிங்: அபிநந்தன் நாடு திரும்புவதையொட்டி ,#WelcomeHomeAbhinandan என்ற ஹேஸ்டாக், சமூக வலைதளமான ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

பெற்றோர் டெல்லி பயணம்: முன்னதாக, அபிநந்தனை வரவேற்ற அவரது பெற்றோர் நேற்று நள்ளிரவு, சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP