போதை வஸ்துகளை கைவிடுங்கள்- சாதுக்களுக்கு பாபா ராம்தேவ் வேண்டுகோள்

கும்பமேளாவில் சாதுக்களிடம் பேசிய பாபா ராம்தேவ், புகையிலை மற்றும் போதை வஸ்துகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
 | 

போதை வஸ்துகளை கைவிடுங்கள்- சாதுக்களுக்கு  பாபா ராம்தேவ் வேண்டுகோள்

கும்பமேளாவில் சாதுக்களிடம் பேசிய பாபா ராம்தேவ், புகையிலை மற்றும் போதை வஸ்துகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளா விழாவில் திரண்ட சாதுக்களிடம் பாபா ராம்தேவ் கலந்துரையாடினார்.

துறவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான சாதுக்கள் 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா விழாவில் திரள்வது வழக்கம். இவர்களிடம் கஞ்சா, சுருட்டு மற்றும் புகைப் பழக்கம் தாராளமாக இருக்கிறது.

இந்நிலையில் சாதுக்களிடம் பேசிய பாபா ராம்தேவ், புகையிலை மற்றும் போதை வஸ்துகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். கங்கை நதிமீதும் இறைவனின் மீதும் சத்தியம் செய்து இந்த கெட்டப்பழக்கத்தை விட்டு ஒழியுங்கள் என்று பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் நாம் பின்பற்றும் ராமரும், கிருஷ்ணரும் புகைபிடிக்காத போது நாம் மட்டும் ஏன் புகைபிடிக்க வேண்டும் ? புகைபிடிப்பதை விடுவோம் என உறுதி ஏற்போம் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP