நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் சபாநாயகர் உரையுடன் தொடங்கியது.
 | 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் சபாநாயகர் உரையுடன் தொடங்கியது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சபாநாயகர்களின் உரையுடன் இன்று தொடங்கியது. அருண்ஜெட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா உள்ளிட்ட தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 20 அமர்வுகளைக் கொண்ட இந்த கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதன் முறையாக இந்த தொடரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. மக்களவையில், சபாநாயர் ஓம்பிர்லா முன்னிலையில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 4 புதிய எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP