விமானப்படை வீரர்களின் வீரத்திற்கு ஓர் சல்யூட் !

சமீபத்தில் கூட பாக்கிஸ்தான் போர் விமானங்கள் நம் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற போது, நம் விமானப்படை வீரர் அபிநந்தன், துணிச்சலுடன் போராடி அந்நாட்டு விமானங்களை விரட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு சிக்கிய அவர், மத்திய அரசு முயற்சியால் மீண்டும் நாடு திரும்பினார்.
 | 

விமானப்படை வீரர்களின் வீரத்திற்கு ஓர் சல்யூட் !

உலகின் மிகப்பெரிய விமானப்படைகளில் நான்காம் இடம் வகிப்பது இந்திய விமானப்படை. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு இருந்தபோது, ஆங்கிலேய அரசாங்கத்தால், ராயல் இந்தியன் ஏர் போர்ஸ் என்ற பெயரின், 1932ம் ஆண்டு அக்டோபர் 8ல் விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. 

அப்போது முழுவதும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய விமானப்படை, நாடு சுதந்திரம் அடைந்த பின்,  தன்னிச்சையாக இயங்கத்துவங்கியது. அதன் பின், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்புகளில் முக்கிய இடம் பிடித்த விமானப்படை, பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான போர்களின் போது, எதிரிப்படைக்கு எதிராக சண்டையிடுவதில் முக்கிய பங்காற்றியது. 

மெல்ல மெல்ல முக்கிய போர் விமானங்களை தன்னகத்தே இணைத்துக்கொண்ட இந்திய விமானப்படை, இன்று உலக அளவில் மிகச்சிறந்த விமானப்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. 

சமீபத்தில் கூட பாக்கிஸ்தான் போர் விமானங்கள் நம் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்ற போது, நம் விமானப்படை வீரர் அபிநந்தன், துணிச்சலுடன் போராடி அந்நாட்டு விமானங்களை விரட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு சிக்கிய அவர், மத்திய அரசு முயற்சியால் மீண்டும் நாடு திரும்பினார். 

ஆண்டுதோறும், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சிகளில், நம் விமானப்படை வீரர்கள் தங்கள் திறமையை சாகசங்கள் மூலம் வெளிப்படுத்துவர். நம் விமானப்படையினரின் ஒப்பற்ற தியாகம், உழைப்பால்தான் நாம் அனைவரும் நம் வீடுகளில் நிம்மதியாக உறங்குகிறோம் என்பதை மனதில் எண்ணி, அவர்களுக்கு ஓர் சல்யூட் வைப்பதில் பெருமை கொள்வோம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP