மத்திய பிரேதசத்தில் வரலாறு காணாத குளிர்

மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும், வரலாறு காணாத குளிர் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் மூடு பனி நிலவுவதால் முக்கிய நகரங்களில், ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 | 

மத்திய பிரேதசத்தில் வரலாறு காணாத குளிர்

மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும், வரலாறு காணாத குளிர் நிலவுகிறது. மாநிலம் முழுவதும் மூடு பனி நிலவுவதால் முக்கிய நகரங்களில், ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவாலியரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று காலை பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால், மும்பை, டில்லி போன்ற நகரங்களில் வந்த விமானங்கள், நான்கு மணி நேரம் தாமதமாகவே தரையிறக்கப்பட்டன. விமானப் புறப்பாடும் தாமதமானது. 

சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல், வானகங்களை ஓரம்கட்டி விட்டு, பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுைகயில், ‛‛ மத்திய பிரதேசத்தில் இதுவரை இவ்வளவு பனிப் பொழிவோ, குளிரோ இருந்ததில்லை. வளிமண்டலத்தில் நிலவும் குளிர்காற்று மற்றும் பஞ்சாப், ஹியானா, மேற்கு வங்க மாநிலங்களில் பெய்து வரும் மழைப் பொழிவால், ம.பி.,யில் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. 
மேலும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும்,’’என தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP