நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில்  76½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் !

17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும், 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளதாகவும் தகவல்.
 | 

நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளில்  76½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் !

ஒன்றரை வருடங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகளை நாடு முழுவதும் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அந்த புள்ளி விவரத்தில், 17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும், 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளதாகவும் தகவல்  தொழிலாாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP