சத்தீஸ்கரில் 7 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், நக்சல் தீவிரவாதிகள் 7 பேர் சிறப்பு பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

சத்தீஸ்கரில் 7 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், நக்சல் தீவிரவாதிகள் 7 பேர் சிறப்பு பாதுகாப்புப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்டார்(Bastar) எனும் மாவட்டத்தில் Tiriya village எனும் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சிறப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அவ்விடத்தில் பதுங்கியிருந்த நக்சல்கள், சிறப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த ஏழு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தொடர்ந்து நக்சல்களை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP