உ.பியில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்து: 50 குழந்தைகள் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
 | 

உ.பியில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்து: 50 குழந்தைகள் படுகாயம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. பின்னர் மீட்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்கும் பணி நடைபெற்றது. இதில் குழந்தைகள் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிக் கட்டிடம் மிகவும் பழமையானது என்பதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP