50 முக்கிய அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, தமது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 'உறுதிமொழி பத்திரம்' என்ற பெயரில் பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வெளியிட்டனர்.
 | 

2019ம் ஆண்டுக்கான 19வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டநிலையில், மத்தியில் ஆளும் பாஜக, இன்று (ஏப்.8) தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாஜக தலைவர்கள், மாநில பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

50 முக்கிய அம்சங்கள் அடங்கிய பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

தொடர்ந்து, 'உறுதிமொழி பத்திரம்' (Sankalp Patra)என்ற பெயரில் பாஜக-வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா வெளியிட்டனர். 48பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 50 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. 

தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாசித்து வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP