5 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சி தான்: முதல்வர் குமாரசாமி உறுதி!

'கர்நாடகாவில் 5 ஆண்டுகளுக்கு எங்களது கூட்டணி ஆட்சியே நீடிக்கும், அதில் எந்த மாற்றமுமில்லை' என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 | 

5 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சி தான்: முதல்வர் குமாரசாமி உறுதி!

'கர்நாடகாவில் 5 ஆண்டுகளுக்கு எங்களது கூட்டணி ஆட்சியே நீடிக்கும், அதில் எந்த மாற்றமுமில்லை' என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில் கூட்டணி கட்சியில் உள்ள 18 எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு மாற இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. மேலும் காங்கிரஸ் - ம.ஜ.த இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி இதுகுறித்து பேசுகையில், "எங்களது கூட்டணியை கட்சி எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP