உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி!

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் நன்கிராம் என்ற பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அவர்ளுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 | 

உ.பியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பலி!

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் நன்கிராம் என்ற பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

பின்னர் அப்பகுதியில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP