மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 | 

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வால் ரூ.16,000 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் செலவாகும்’ என்றார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீரில் குடியேறிய 5,300 குடும்பங்களுக்கு தலா ரூ.5.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கான நலஉதவிபெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவை நவம்பர் 30ஆம் தேதி வரை தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP