இலங்கையில் 44 இந்தியர்கள் கைது! காரணம் இதுதான்..

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கிய இந்தியர்கள் 44 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
 | 

இலங்கையில் 44 இந்தியர்கள் கைது! காரணம் இதுதான்..

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கிய இந்தியர்கள் 44 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

இலங்கையில் விசா காலம் முடிந்த பின்னரும், இந்தியர்கள் சிலர் தங்கி உள்ளதாக அந்நாட்டு அரசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி,  அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கொழும்பின் புறநகர் பகுதியில் கட்டுமானப் பணியில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 44 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா காலம் முடிந்து அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் அங்கு தங்கி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று உரிய ஆவணங்களின்றி அங்கு வேலை செய்து வந்த 18 இந்தியர்களின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP