டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள சவான் பார்க் அருகே உள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 | 

டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

டெல்லியில் 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள சவான் பார்க் அருகே உள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இன்று காலை 9.25 மணியளவில் இந்த சம்பவமானது நடந்துள்ளது. உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 6 தீயணைப்பு வாகனங்கள், 2 என்ஆர்பிஎப் படைகள் வந்தன. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்றது. 

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள தீப் சந்த் பந்து என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், 'கட்டிடம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது. ஏற்கனவே கட்டிடம் பலவீனமாக இருந்ததால் தான் இந்த விபத்து நடந்துள்ளது' என தெரிவித்தார். 

இந்த விபத்து குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP