பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
 | 

பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாமில் தொடங்கிய போராட்டம் திரிபுரா, மேகலாயா என பரவி வருகிறது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அந்த மாநிலங்கள் பற்றி எரிகின்றன. இதனால் அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த, 350 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

 கவுகாத்தியின் லாலங் கயான் பகுதியில் போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை விரட்டியபோது காவல்துறையினர் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் முடக்கப்பட்டன. ராங்கியா நகரில் போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களையும், வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
பற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலிஅசாம் தவிர மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று ஆங்காங்கே வன்முறைகள் நடந்தன. மேகாலயாவின் ஷில்லாங்கில் மார்க்கெட் பகுதிகளில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஷில்லாங்கிலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கும் 144 தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.   

இதற்கிடையே, கவுகாத்தியில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறியதற்காக காவல் ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP