மக்களவையில் மேலும் 3 அதிமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் ஏற்கனவே அதிமுக எம்.பிக்கள் 31 பேர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 அதிமுக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.
 | 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவையின் உள்ளே தொடர் அமளியில் ஈடுபடுவதால் விவாதம் மற்றும் மசோதா தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக  ஏற்கனவே அதிமுக எம்.பிக்கள் 31 பேர் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று அமளியில் ஈடுபட்ட மேலும் 3 அதிமுக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். வேணு கோபால், கோபால், ராமசந்திரன் ஆகிய மூவரும் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

பின்னர் இதுகுறித்து மக்களவையில் பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரை, "மேகதாது விவகாரத்தில் மக்கள் கொதித்து போயுள்ளதால் அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை இடைநீக்கம் செய்தது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP